Posts

திரிகடுகம் பாடல் 11 - 15

Image
  புலவர்   நல்லாதனார் இயற்றிய   திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்    குறிக்கும்" பாடல் 11 மூலப்பாடல்   விளியாதான்கூத்தாட்டுக்காணடலும்வீழக் களியாதான்காவாதுரையுந் தெளியாதான் கூரையுட்பல்காலுஞ்சேறலும் இம்மூன்றும் ஊரெல்லாநோவதுடைத்து   பிரித்தெழுதுதல் விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவாது உரையும் தெளியாதான் கூரையுள் பல் காலும் சேறலும் - இம் மூன்றும் ஊர் எலாம் நோவது உடைத்து பாடலின் பொருள் இனிய   ராகங்கள்   அமையாது   நடக்கும் கூத்தை பார்ப்பவர்களும் தன்னிலை அறியாது கள்ளுண்டு இருப்பவர் சொல்லை நம்புபவர்களும் நம்பிகையில்லாதவர் வீட்டிற்கு பலமுறை போய்வருவோர்களும் இருக்கும் ஊரானது வருந்தத்தக்க நிலையில் அமையப்பெற்ற ஊராம்     பாடல் 12   மூலப்பாடல்   தாளாளனென்பான்கடன்படாவாழ்பவன் வேளாளனென்பான் விருந்திருக்கவுண்ணாதான் கோளாளனென்பான்மறவாதான் இம்மூவர் கேளாகவாழ்தலினிது   பிரித்தெழுதுதல் தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன் வேளாளன் என்

திரிகடுகம் பாடல் 6 - 10

Image
  புலவர்   நல்லாதனார் இயற்றிய   திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்    குறிக்கும்" பாடல் 6 மூலப்பாடல்  பிறர்தன்னைப்பேணுங்காணாணலும்பேணார் திறன்வேறுகூறிற் பொறையும் அறவினையைக் காராண்மைபோல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மையென்னுஞ்செருக்கு   பிரித்தெழுதுதல் பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன் வேறு கூறின் பொறையும் அற வினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் இம் மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு   பாடலின் பொருள் அன்புள்ளவர் தம்மை புகழும் நிலையில் நாணுதலும் அன்பில்லாதவர் தம்மை இகழும் நிலையில் பொறுத்து செல்வது நல்ல செயல்களை தாமதமின்றி செய்வதுமனா செயல்களைப் போல இம்மூன்றின் சிறப்பு   பாடல் 7 மூலப்பாடல்  வாளைமீனுள்ளறலைப்படலுமாளல்லான் செல்வக்குடியிற்பிறத்தலும் பல்லவையுள் அஞ்சுவான்கற்றவருநூலும் இம்மூன்றுந் துஞ்சூமன்கண்டகனா   பிரித்தெழுதுதல் வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும் பல் சபையின் அஞ்சுவான் கற்ற அரு நூலும் இம் மூன்றும் த

திரிகடுகம் பாடல் 1 - 5

Image
  புலவர் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்   குறிக்கும்" கடவுள் வாழ்த்து மூலப்பாடல்  கண்ணகன்   ஞாலமளந்ததூ உங்காமருசீர்த் தண்ணறும் பூங்குருஞ்சாய்த்ததூ உம் நண்ணிய மாயச்சகடமுதைத்ததூ உம் இம்மூன்றும் பூவைப்பூவண்ணனடி   பிரித்தெழுதுதல் கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் காமரு சீர்த் தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம் மூன்றும் பூவைப் பூ வண்ணன் அடி   பாடல் 1 மூலப்பாடல்  அருந்ததிக்கற்பினார் தோளுந்திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் சொல்லின் அரில்கற்றுங்கேள்வியார் நட்பும் இம்மூன்றும் திரிகடுகம்போலும் மருந்து பிரித்தெழுதுதல் அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து பாடலின் பொருள்   கற்பில் அருந்ததியை போல விளங்கும் பெண்ணை மணப்பது​ம்​ நல்ல குணங்களை கொண்டவர்களுடன் உறவு​ பாராட்டுவது​ம்

இனியவை நாற்பது பாடல் 36 - 40

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்  பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 36 அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே செவ்வியனாய்ச் செற்றுச் சினம்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாம் கொண்டுதாம் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது பாடல் 37 இளமையை மூப்பென்று உணர்தல் இனிதே கிளைஞர்மாட்டு அச்சின்மை கேட்டல் இனிதே தடமென் பணைத்தோள் தளிரிய லாரை விடமென்று உணர்தல் இனிது பாடல் 38 சிற்றாள் உடையான் படைக்கல மாண்பினிதே நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும் கற்றா உடையான் விருந்து பாடல் 39 பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது பாடல் 40 பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துக்குற்று உண்ணா விழுப்பம் மிகஇனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலின் காழ்இனிய தில்

இனியவை நாற்பது பாடல் 31 - 35

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்  பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 31 அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது பாடல் 32 கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள்இனிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையின் பாங்கினிய தில் பாடல் 33 ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே வாள்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர் தானை தடுத்தல் இனிது பாடல் 34 எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளில்லார் தம்கேண்மை கொள்ளா விடுதல் இனிது பாடல் 35 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன் இனிதே முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே பற்றிலராய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது

இனியவை நாற்பது பாடல் 26 - 30

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்  பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 26 நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல் பாடல் 27 தானம் கொடுப்பான் தகைஆண்மை முன்இனிதே மானம் படவரின் வாழாமை முன்இனிதே ஊளம்கொண் டாடார் உறுதி உடையவை கோள்முறையால் கோடல் இனிது பாடல் 28 ஆற்றானை ஆற்றென்று அலையாமை முன்இனிதே கூற்றம் வரவுஉண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வினியது .இல் பாடல் 29 கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே எளியர் இவரென்று இகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்தல் இனிது பாடல் 30 நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென்று அடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல்

இனியவை நாற்பது பாடல் 21 - 25

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்  பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 21 பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே மறந்தேயும் மாணா மயரிகள் சேராத திறம்தெரிந்து வாழ்தல் இனிது, பாடல் 22 வருவாய் அறிந்து வழங்கல் இனிதே ஒருவர்பங்கு ஆகாத ஊக்கம் இனிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது பாடல் 23 காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே ஆவோடு பொன்ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில்மொழிச் சூதரைச் சோர்தல் இனிது பாடல் 24 வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்புஇனிதே ஒல்லும் துணையும் ஓன்றுஉய்ப்பான் பொறைஇனிதே இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது பாடல் 25 ஐவாய. வேட்கை அவாஅடக்கல் முன்இனிதே கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வினிதே நில்லாத காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது

இனியவை நாற்பது பாடல் 16 - 20

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்  பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 16 கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே எள்துணை யானும் இரவாது .தான்ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது பாடல் 17 நட்டார்க்கு நல்ல செயல்இனிது எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல்அதனின் முன்இனிதே பற்பல தானியத்த தாகிப் பலர்உடையும் மெய்த்துணையும் சேரல் இனிது பாடல் 18 மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது பாடல் 19 நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது தக்குழி ஈதல் இனிது பாடல் 20 சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது

இனியவை நாற்பது பாடல் 11 - 15

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்    பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 11 அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப் பெருமைபோல் பீடுடைய தில் பாடல் 12 குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே .மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவும்தீர் வின்றேல் இனிது பாடல் 13 மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை மானிடவர்க் கெல்லாம் இனிது பாடல் 14 குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்தும் மனன் அஞ்சான் ஆகல் இனிது பாடல் 15 பிறன்மனை. பின்நோக்காப் பீடினிது. ஆற்ற வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிதே மறமன்னர் தம்கடையுள் மாமலைபோல் யானை மதமுழக்கம் கேட்டல் இனிது

இனியவை நாற்பது பாடல் 6 - 10

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்    பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது பாடல் 6 ஆற்றும் துணையால் அறம்செய்கை முன்இனிதே பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக் காப்படையக் கோடல் இனிது பாடல் 7 அந்தணர் ஒத்துடைமை ஆற்ற மிகஇனிதே பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல் கொண்டடையா னாகல் இனிது பாடல் 8 ஊரும் கலிமா உரனுடைமை முன்இனிதே தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் கார்வரை யானைக் கதம்காண்டல் முன்இனிதே ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது பாடல் 9 தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும் அன்புடைய ராதல் இனிது பாடல் 10 கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண் பிலாதவரை அஞ்சி அகறல் எனைமாண்பும் தான்இனிது நன்கு

இனியவை நாற்பது பாடல் 1 - 5

Image
  பதினெண் கீழ்க் கணக்கு  நூல்    பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை   நாற்பது கடவுள் வாழ்த்து கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் :குடையாளைச் சென்றமர்ந்து ஏத்தல் இனிது   பாடல் 1 பிச்சைபுக் காயினும் கற்றல் மிகஇனிதே நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினிது ஆங்கினிதே தெற்றவும் மேலாயார்ச் சேர்வு   பாடல் 2 உடையான் வழக்கினிது ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன்இனிது மாணாதா மாயின் நிலையாமை.நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நன்கு பாடல் 3 ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் :நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரின்கோள் நட்புத் திசைக்கு   பாடல் 4 யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை ஊரர்இனிது ஆங்கினிதே மான முடையார் மதிப்பு   பாடல் 5 கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயம் செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல் எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும் பொல்லாங் குரையாமை நன்று

Principles of Marketing

Image
Principles of Marketing Dr. P. Uma Swarupa Contents MARKET MARKETING MODERN CONCEPT OF MARKETING - MODERN MARKETING GLOBAL MARKETING E-MARKETING TELEMARKETING GREEN MARKETING ONLINE MARKETING NEURO MARKETING MARKETING FUNCTIONS – I MARKETING FUNCTIONS – II MARKETING FUNCTIONS – III CONSUMER BEHAVIOR MARKET SEGMENTATION CUSTOMER RELATIONSHIP MARKETING MARKETING MIX PRODUCT MIX BRANDING LABELLING PRICE MIX PLACE MIX PROMOTION PERSONAL SELLING ADVERTISING AGRICULTURAL MARKETING QUALITY STANDARDS CONSUMERISM CAREER OPPORTUNITIES IN MARKETING Get ePDF through email on payment of ₹ 150

Marketing Management-Creation of Cognizance

Image
Marketing Management- Creation of Cognizance Dr. Vanitha Esaimani Contents Principles of Marketing Market Research and Data Mining Consumer Behaviour Market Segmentation Customer Relationship Management Target Markets Marketing Mix Product Life Cycle Product Branding Product Packaging Product Positioning Product Pricing Marketing Channels Supply Chain Management and Physical Distribution Promotion Sales Management Marketing Ethics Competitive Market Strategies Marketing Strategies for Market Challengers Rural Marketing Digital Marketing Green Marketing Challenges in Marketing Careers in Marketing Success of Brands in India Get ePDF through email on payment of ₹ 150.