திரிகடுகம் பாடல் 11 - 15

புலவர் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும் குறிக்கும்" பாடல் 11 மூலப்பாடல் விளியாதான்கூத்தாட்டுக்காணடலும்வீழக் களியாதான்காவாதுரையுந் தெளியாதான் கூரையுட்பல்காலுஞ்சேறலும் இம்மூன்றும் ஊரெல்லாநோவதுடைத்து பிரித்தெழுதுதல் விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவாது உரையும் தெளியாதான் கூரையுள் பல் காலும் சேறலும் - இம் மூன்றும் ஊர் எலாம் நோவது உடைத்து பாடலின் பொருள் இனிய ராகங்கள் அமையாது நடக்கும் கூத்தை பார்ப்பவர்களும் தன்னிலை அறியாது கள்ளுண்டு இருப்பவர் சொல்லை நம்புபவர்களும் நம்பிகையில்லாதவர் வீட்டிற்கு பலமுறை போய்வருவோர்களும் இருக்கும் ஊரானது வருந்தத்தக்க நிலையில் அமையப்பெற்ற ஊராம் பாடல் 12 மூலப்பாடல் தாளாளனென்பான்கடன்படாவாழ்பவன் வேளாளனென்பான் விருந்திருக்கவுண்ணாதான் கோளாளனென்பான்மறவாதான் இம்மூவர் கேளாகவாழ்தலினிது ப...