திரிகடுகம் பாடல் 6 - 10

 

புலவர் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்



"இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்  குறிக்கும்"





பாடல் 6

மூலப்பாடல் 

பிறர்தன்னைப்பேணுங்காணாணலும்பேணார்

திறன்வேறுகூறிற் பொறையும் அறவினையைக்

காராண்மைபோல வொழுகலும் இம்மூன்றும்

ஊராண்மையென்னுஞ்செருக்கு

 பிரித்தெழுதுதல்

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்

திறன் வேறு கூறின் பொறையும் அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும் இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு

 பாடலின் பொருள்

அன்புள்ளவர் தம்மை புகழும் நிலையில் நாணுதலும் அன்பில்லாதவர் தம்மை இகழும் நிலையில் பொறுத்து செல்வது நல்ல செயல்களை தாமதமின்றி செய்வதுமனா செயல்களைப் போல இம்மூன்றின் சிறப்பு

 

பாடல் 7

மூலப்பாடல் 

வாளைமீனுள்ளறலைப்படலுமாளல்லான்

செல்வக்குடியிற்பிறத்தலும் பல்லவையுள்

அஞ்சுவான்கற்றவருநூலும் இம்மூன்றுந்

துஞ்சூமன்கண்டகனா

 பிரித்தெழுதுதல்

வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான்

செல்வக் குடியுள் பிறத்தலும் பல் சபையின்

அஞ்சுவான் கற்ற அரு நூலும் இம் மூன்றும்

துஞ்சு ஊமன் கண்ட கனா

 பாடலின் பொருள்

வாளை மீனைப் பிடிக்க உள்ளான் பறவை எண்ணுதலும் கட்டியாலும் திறமை இல்லாதவன் செல்வம் மிக்க குடியில் பிறப்பதும் சிறந்த நூலினை படுத்தும் பலர் கூடிய சபையில் செல்ல அஞ்சுவதும் ஒரு ஊமை கண்ட கனவு போல வீணாகும் இம்மூன்றின் சிறப்பை அறியாதோர் நிலை

 

பாடல் 8

மூலப்பாடல் 

தொல்லவையுடோன் றுங்குடிமையுந் தொக்கிருந்த

நல்லவையுண் மேம்பட்டகல்வியும் வெல்சமத்து

வேந்துவப்பவட்டார்த்தவென்றியும் இம்மூன்றும்

தாந்தம்மைக்கூறாப் பொருள்

பிரித்தெழுதுதல்

தொல் அவையுள் தோன்றும் குடிமையும் தொக்கு இருந்த

நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் வெல் சமத்து

வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இம் மூன்றும்

தாம் தம்மைக் கூறாப் பொருள்

பாடலின் பொருள்

பழமையில் சிறந்த குடியை நன்கு அறிந்தோரிடத்து நல்ல குடியில் பிறந்தவர் நிற்பதும் சிறந்த பல நூலினை கற்றவர்களின் முன் நல்ல கல்வி கற்றோர் நிற்பதும் போரில் பகைவர்களை சாய்த்து அரசர் மகிழ அவர் முன் நிற்பதும் சிறப்பைத்தரும்  அதுபோல இம்மூன்றும் விளங்கும்

 

பாடல் 9

மூலப்பாடல் 

பெருமையுடையாரினத்தினகற

லுரிமையில் பெண்டீரைக்காமுற்று வாழ்தல்

விழுமியவல்ல துணிதல் இம்மூன்றும்

முழுமக்கள் காதலவை

பிரித்தெழுதுதல்

பெருமை உடையார் இனத்தின் அகறல்

உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்

விழுமிய அல்ல துணிதல் இம் மூன்றும்

முழு மக்கள் காதலவை

பாடலின் பொருள்

பெருந்தன்மை கொண்டவர்களின் நட்பை விட்டு விலகி இருப்பதும் தமக்கு உரிமை இல்லாத பெண்ணுடன் இணைந்து வாழ்தலும் நான்மைதராத தீய செயல்களை துணிந்து செய்வதும் அறிவு இல்லாத மூடர்கள் செய்யும் செயல்கள்

 

பாடல் 10

மூலப்பாடல் 

கணக்காயரில்லாதவூரும் பிணக்கறுக்கும்

மூத்தோரையில்லாவவைக்களனும் பாத்துண்ணும

தன்மையிலாளரயலிருப்பும்  இம்மூன்றும்

நன்மைபயத்தலில

பிரித்தெழுதுதல்

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக் களனும் பாத்து உண்ணாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும் இம் மூன்றும்

நன்மை பயத்தல் இல

பாடலின் பொருள்

கல்வியை பயில்விக்கும் ஆசிரியர் இல்லாத ஊரும் அனுபவத்தில் சிறந்த முதியோர் இல்லாத சபையும் பகிர்ந்து கொடுக்கும் நல்ல குணமில்லாதோரிடத்து வசிப்பதும் நன்மை தராது அதுபோன்று இம்மூன்றும் இல்லாதோர் நிலை

Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e