திரிகடுகம் பாடல் 11 - 15

 

புலவர் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்



"இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்  குறிக்கும்"





பாடல் 11

மூலப்பாடல் 

விளியாதான்கூத்தாட்டுக்காணடலும்வீழக்

களியாதான்காவாதுரையுந் தெளியாதான்

கூரையுட்பல்காலுஞ்சேறலும் இம்மூன்றும்

ஊரெல்லாநோவதுடைத்து

 

பிரித்தெழுதுதல்

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்

களியாதான் காவாது உரையும் தெளியாதான்

கூரையுள் பல் காலும் சேறலும் - இம் மூன்றும்

ஊர் எலாம் நோவது உடைத்து


பாடலின் பொருள்

இனிய  ராகங்கள்  அமையாது  நடக்கும் கூத்தை பார்ப்பவர்களும் தன்னிலை அறியாது கள்ளுண்டு இருப்பவர் சொல்லை நம்புபவர்களும் நம்பிகையில்லாதவர் வீட்டிற்கு பலமுறை போய்வருவோர்களும் இருக்கும் ஊரானது வருந்தத்தக்க நிலையில் அமையப்பெற்ற ஊராம்

  

பாடல் 12 

மூலப்பாடல் 

தாளாளனென்பான்கடன்படாவாழ்பவன்

வேளாளனென்பான் விருந்திருக்கவுண்ணாதான்

கோளாளனென்பான்மறவாதான் இம்மூவர்

கேளாகவாழ்தலினிது


 பிரித்தெழுதுதல்

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்

கோளாளன் என்பான் மறவாதான் - இம் மூவர்

கேள் ஆக வாழ்தல் இனிது

 

பாடலின் பொருள்

தாளாளன் எ​ன்பவர் தனது முயற்சியால் வளருவர் பிறரிடம் கட​ன் பெற மாட்டார் வேளாளன் என்பவர் பிறருக்கு உணவு அளித்து உபசரித்த பின் தான் உண்பார் கோளாளன் என்பவர் கற்றோர் கூறும் நல்ல கருத்துக்களை உள்வாங்கி அதன்வழி நடப்பார் இவர்கள் மூவரின் நட்பு ஒருவருக்கு இன்பத்தை தரும்.


Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e