திரிகடுகம் பாடல் 1 - 5

 

புலவர் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்



"இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்  குறிக்கும்"



கடவுள் வாழ்த்து

மூலப்பாடல் 

கண்ணகன்  ஞாலமளந்ததூ உங்காமருசீர்த்

தண்ணறும் பூங்குருஞ்சாய்த்ததூ உம் நண்ணிய

மாயச்சகடமுதைத்ததூ உம் இம்மூன்றும்

பூவைப்பூவண்ணனடி

 பிரித்தெழுதுதல்

கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் காமரு சீர்த்

தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய

மாயச் சகடம் உதைத்ததூஉம் இம் மூன்றும்

பூவைப் பூ வண்ணன் அடி

 

பாடல் 1

மூலப்பாடல் 

அருந்ததிக்கற்பினார் தோளுந்திருந்திய

தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் சொல்லின்

அரில்கற்றுங்கேள்வியார் நட்பும் இம்மூன்றும்

திரிகடுகம்போலும் மருந்து

பிரித்தெழுதுதல்

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய

தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின்

அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம் மூன்றும்

திரிகடுகம் போலும் மருந்து

பாடலின் பொருள் 

கற்பில் அருந்ததியை போல விளங்கும் பெண்ணை மணப்பது​ம்​ நல்ல குணங்களை கொண்டவர்களுடன் உறவு​ பாராட்டுவது​ம் தீயதை விலக்கி நல்லவைகளை உரைக்கும் நல்லோர் நட்பு ​சேர்வதும் சிறந்தது அதுபோல விளங்கும் இம்மூன்றும்  

 

பாடல் 2

மூலப்பாடல் 

தன்குணங்குண்றாத்தகைமையும்தாவில்சீ

ரின்குணத்தாரேவினசெய்தலும் நன்குணர்வி

னான்மறையாளர் வழிச்செலவும் இம்மூன்றும்

மேன்முறையாளர் தொழில்

 பிரித்தெழுதுதல்

தன் குணம் குன்றாத் தகைமையும் தா இல் சீர்

இன் குணத்தார் ஏவின செய்தலும் நன்கு உணர்வின்

நான்மறையாளர் வழிச் செலவும் இம் மூன்றும்

மேல் முறையாளர் தொழில்

பாடலின் பொருள் 

ஒருவர் பிறந்த குடியின் நல்ல பெயருக்கு தீங்கு வராமல் நடத்தலும் குற்றமற்ற நல்ல குணமுடையவர்  கொடுக்கும் பணியை எடுத்து செயல்படுத்தல் நல்லவைகளை உரைக்கும் சான்றோரின் சொற்படி நடப்பது போன்ற செயல்களை இம்மூன்றும் புரியும்

 

பாடல் 3

மூலப்பாடல் 

கல்லார்க்கினனாயொழுகலுங் காழ்கொண்ட

வில்லாளைக் கோலாற்புடைத்தலும் இல்லஞ்

சிறியாரைக்கொண்டு புகலும் இம்மூன்றும்

அறியாமையால்வரும் கேடு

 பிரித்தெழுதுதல்

கல்லார்க்கு இன்னா ஒழுகலும் காழ்க் கொண்ட

இல்லாளைக் கோலால் புடைத்தலும் இல்லம்

சிறியாரைக் கொண்டு புகலும் இம் மூன்றும்

அறியாமையான் வரும் கேடு

 பாடலின் பொருள் 

 கல்வி அறிவு இல்லாதோரிடம் அன்பு வைப்பது நல்ல குணமுடைய​ மணமுடித்த பெண்ணை அடிப்பதும் சிற்றறிவு கொண்டவர்களை தம்மனை அழைத்தாலும் அறிவில்லாத செயல் அதுபோல இம்மூன்றின் நலத்தன்மைகளை அறியாதவர் நிலை

 

பாடல் 4
மூலப்பாடல்
 

பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற

பெற்றத்துட்கோலி றிச்சேறலும் முற்றன்னைக்

காய்வானைக்கைவாங்கிக்கோடலும் இம் மூன்றும்

சாவவுறுவான் றொழில்

 பிரித்தெழுதுதல்

பகை முன்னர் வாழ்க்கை செயலும் தொகை நின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும் முன் தன்னைக்

காய்வானைக் கை வாங்கிக் கோடலும் இம் மூன்றும்

சாவ உறுவான் தொழில்

பாடலின் பொருள் 

தனது பகைவரின் முன் பெரும் செல்வத்துடன் வாழும் நிலை பசுக்கள் நிறைந்த இடத்தின் நடுவில் பிரம்பின்றி நிற்கும் நிலை பிறரை வருத்தி துன்புறச் செய்வோர் முன் நிற்கும் நிலை பெரும் துன்பத்தை தரும் அதுபோல இம்மூன்றையும் அறியாதவர் நிலை 

 

பாடல் 5

மூலப்பாடல் 

வழங்காத்துறை யிழிந்துநீர்ப்போக்கும் மொப்ப

விழைவிலாப் பெண்டீர் தோள்சேர்வும் உழந்து

விருந்தினனாய் வேற்றூர்புகலும் இம்மூன்றும்

அருந்துயரங்காட்டுநெறி

பிரித்தெழுதுதல்

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும் ஒப்ப

விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும் உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும் இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி

 பாடலின் பொருள்

 ஒருவரும் நீந்தாத நதிக்கரையில் இறங்குவதும் தன்னை விரும்பாத பெண்ணை மணம் புரிவதும் அழையாதோர் மனையில் விருந்து உண்ண போவதும் துன்பத்தை தரும் அதுபோல இம்மூன்றின் சிறப்பு அறியாதோர் நிலை     

Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e