இனியவை நாற்பது பாடல் 31 - 35

 

பதினெண் கீழ்க் கணக்கு நூல் 
பூதன் சேந்தனார் இயற்றிய

இனியவை நாற்பது








பாடல் 31

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது

பாடல் 32

கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையின் பாங்கினிய தில்

பாடல் 33

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாள்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது

பாடல் 34

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளில்லார் தம்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது

பாடல் 35

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன் இனிதே
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்றிலராய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது


Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e