இனியவை நாற்பது பாடல் 11 - 15

 

பதினெண் கீழ்க் கணக்கு நூல்  

பூதன் சேந்தனார் இயற்றிய

இனியவை நாற்பது








பாடல் 11

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோல் பீடுடைய தில்

பாடல் 12

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
.மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவும்தீர் வின்றேல் இனிது

பாடல் 13

மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே
தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது

பாடல் 14

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்தும்
மனன் அஞ்சான் ஆகல் இனிது

பாடல் 15

பிறன்மனை. பின்நோக்காப் பீடினிது. ஆற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிதே
மறமன்னர் தம்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கம் கேட்டல் இனிது

Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e