Posts

Showing posts from January, 2024

திரிகடுகம் பாடல் 11 - 15

Image
  புலவர்   நல்லாதனார் இயற்றிய   திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்    குறிக்கும்" பாடல் 11 மூலப்பாடல்   விளியாதான்கூத்தாட்டுக்காணடலும்வீழக் களியாதான்காவாதுரையுந் தெளியாதான் கூரையுட்பல்காலுஞ்சேறலும் இம்மூன்றும் ஊரெல்லாநோவதுடைத்து   பிரித்தெழுதுதல் விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவாது உரையும் தெளியாதான் கூரையுள் பல் காலும் சேறலும் - இம் மூன்றும் ஊர் எலாம் நோவது உடைத்து பாடலின் பொருள் இனிய   ராகங்கள்   அமையாது   நடக்கும் கூத்தை பார்ப்பவர்களும் தன்னிலை அறியாது கள்ளுண்டு இருப்பவர் சொல்லை நம்புபவர்களும் நம்பிகையில்லாதவர் வீட்டிற்கு பலமுறை போய்வருவோர்களும் இருக்கும் ஊரானது வருந்தத்தக்க நிலையில் அமையப்பெற்ற ஊராம்     பாடல் 12   மூலப்பாடல்   தாளாளனென்பான்கடன்படாவாழ்பவன் வேளாளனென்பான் விருந்திருக்கவுண்ணாதான் கோளாளனென்பான்மறவாதான் இம்மூவர் கேளாகவாழ்தலினிது   பிரித்தெழுதுதல் தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன் வேளாளன் என்

திரிகடுகம் பாடல் 6 - 10

Image
  புலவர்   நல்லாதனார் இயற்றிய   திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்    குறிக்கும்" பாடல் 6 மூலப்பாடல்  பிறர்தன்னைப்பேணுங்காணாணலும்பேணார் திறன்வேறுகூறிற் பொறையும் அறவினையைக் காராண்மைபோல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மையென்னுஞ்செருக்கு   பிரித்தெழுதுதல் பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன் வேறு கூறின் பொறையும் அற வினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் இம் மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு   பாடலின் பொருள் அன்புள்ளவர் தம்மை புகழும் நிலையில் நாணுதலும் அன்பில்லாதவர் தம்மை இகழும் நிலையில் பொறுத்து செல்வது நல்ல செயல்களை தாமதமின்றி செய்வதுமனா செயல்களைப் போல இம்மூன்றின் சிறப்பு   பாடல் 7 மூலப்பாடல்  வாளைமீனுள்ளறலைப்படலுமாளல்லான் செல்வக்குடியிற்பிறத்தலும் பல்லவையுள் அஞ்சுவான்கற்றவருநூலும் இம்மூன்றுந் துஞ்சூமன்கண்டகனா   பிரித்தெழுதுதல் வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும் பல் சபையின் அஞ்சுவான் கற்ற அரு நூலும் இம் மூன்றும் த

திரிகடுகம் பாடல் 1 - 5

Image
  புலவர் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் "இம்மூன்றும் என்று அமையும் திரிகடுகம் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் சுக்கு திப்பிலி மிளகு ஆகிய முன்றையும்   குறிக்கும்" கடவுள் வாழ்த்து மூலப்பாடல்  கண்ணகன்   ஞாலமளந்ததூ உங்காமருசீர்த் தண்ணறும் பூங்குருஞ்சாய்த்ததூ உம் நண்ணிய மாயச்சகடமுதைத்ததூ உம் இம்மூன்றும் பூவைப்பூவண்ணனடி   பிரித்தெழுதுதல் கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் காமரு சீர்த் தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம் மூன்றும் பூவைப் பூ வண்ணன் அடி   பாடல் 1 மூலப்பாடல்  அருந்ததிக்கற்பினார் தோளுந்திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் சொல்லின் அரில்கற்றுங்கேள்வியார் நட்பும் இம்மூன்றும் திரிகடுகம்போலும் மருந்து பிரித்தெழுதுதல் அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து பாடலின் பொருள்   கற்பில் அருந்ததியை போல விளங்கும் பெண்ணை மணப்பது​ம்​ நல்ல குணங்களை கொண்டவர்களுடன் உறவு​ பாராட்டுவது​ம்